இலங்கை அணியின் முன்னணி வீரர் லசித் மலிங்கா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு இந்தியா அணியுடனான போட்டிக்கு இருபதுக்கு 20 போட்டிக்கு பின், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா சர்வதேச போட்டிகளில் களமிறங்கவில்லை. இதற்கு காரணமாக 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிகளில் இளம் வீரர்களை உள்வாங்குவதற்காகவும், மலிங்காவிற்கு ஓய்வு வழங்குவதற்காவும், மலிங்காவிற்கு சர்வதேச போட்டிகளில் சந்தர்ப்பம் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதவுள்ள போட்டி தொடரில் லசித் மலிங்கா சமீபத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில், தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கை அணிக்கு விளையாட தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.