மேஷம்
நேர்மை, நியாயத்தை பின்பற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி பெற கடினமாக உழைப்பீர்கள். குடும்பத்தினரின் தேவை தாராள செலவில் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.
ரிஷபம்
பணியில் அதிக கவனம் தேவை. எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதமாகலாம். தொழில், வியாபார ரகசியங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பயன்படும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும்.
மிதுனம்
பிறரது செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபார பிரச்னை குறுக்கிட்டாலும், பணவரவு சீராக கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பெற்றோரி்ன் அன்பும் ஆசியும் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.
கடகம்
வெகுநாள் திட்டம் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். தாராள பணவரவு இருக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்
பணியில் ஆர்வம் அதிகரிக்கும். வியத்தகு அளவில் வாழ்வில் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். சொத்து வாங்க அனுகூலம் உண்டாகும்.
கன்னி
பொது விஷயம் குறித்து விவாதம் வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவை தவிர்க்கவும். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.
துலாம்
பகைவரிடம் விலகி இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்கும் நிலை உருவாகலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
விருச்சிகம்
தாயின் அன்பு, ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். தாமதமான செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.
தனுசு
நினைத்த செயல் தாமதமாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.
மகரம்
நண்பருடன் முக்கியமான ஆலோசனை செய்வீர்கள். தாமதித்த பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். நிலுவை பணம் வசூலாகும். பெண்கள் உறவினர் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.
கும்பம்
சமூக மதிப்பை காப்பதில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். உறவினர் வகையில் தவிர்க்க இயலாத செலவு ஏற்படலாம். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் ஏற்படலாம்.
மீனம்
மனதில் புத்துணர்வு மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.