Loading...
மட்டக்களப்பு- புதிய காத்தான்குடி அன்வர் பாடசாலை வீதியில், பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, வீட்டை உடைத்த கொள்ளைக் காரர்கள் 10 பவுண் நகை மற்றும் 1 இலட்சத்து 50ஆயிரம் பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இன்று காலை சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸ் அதிகாரிகள், மோப்பநாயின் உதவியுடன் தேடுதல்களை நடாத்தினர்.
Loading...
இக்கொள்ளை சம்பவம் தொடர்பில் ஆதாரங்களை திரட்டியுள்ள காத்தான்குடி பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...