உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது.
ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
கடலையை 6 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயம் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெந்த கடலையையும் சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு முறை வதக்கி இறக்கினால் கொண்டைக்கடலை சுண்டல் தயார்.
இதில் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.
பயன்கள்…
- இதை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடலின் ஆற்றலை அதிகரிக்கப்பதுடன் கொழுப்பும் குறையும்.
- இந்த குழம்பு உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது.