யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து. ஏற்பட்ட பதற்ற நிலையால், வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
பம்பைமடுவில் உள்ள வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டனர்.
வளாக நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்தது.
இதையடுத்து, சிங்கள மாணவர்கள் நிர்வாகப் பிரிவை முற்றுகையிட முனைந்த போது, பதற்ற நிலை ஏற்பட்டது. சிறிலங்கா காவல்துறையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து, காலவரையறையின்றி வளாகத்தை மூடியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களையும் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.