இந்தோனேசியாவில் பெற்றோல் கிணறு தீப்பற்றியதில் சுமார் 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் சுமத்ரா தீவின் வடக்குமுனையில் உள்ள ஆசே மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளில் பெற்றோல் ஊற்றுகள் காணப்படுகின்றன. மேலும் இங்கு அரசின் அனுமதி இன்றி பலர் தமது காணிகளில் பெற்றோல் கிணறுகள் அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை பசி புட்டி கிராமத்தில் உள்ள பெற்றோல் கிணற்றில் தீப்பற்றியுள்ளது. இதன் காரணமாக 15 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பசி புட்டி கிராமத்தில் புதிதாக சுமார் 250 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து, ஊற்றெடுத்து வழியும் கச்சா எண்ணையை பிடித்து செல்வதற்காக, சில நாட்களாக இங்கு பலர் முகாமிட்டு இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.