இலங்கையின் காட்டுப் பகுதி ஒன்றுக்குள் இதுவரை யாரும் கண்டறியாத 7 நீர் வீழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படல்குடும்புர பிரதேச செயலக பிரிவில் மாணிக்க கங்கைக்கு அருகில் மர்மமான முறையில் அமைந்திருந்த நீர்வீழ்ச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
70 அடி அளவு பாரிய நீர் வீழ்ச்சி ஒன்றும் அதற்கு அருகில் 10 முதல் 20 அடியிலான சிறிய 7 நீர்வீழ்ச்சிகளையும் சுற்றுலா குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சிகள் பாரிய காட்டுப் பிரதேசம் ஒன்றில் அமைந்துள்ள நிலையில் அதற்கு பெரிய கற்பாறை ஒன்றை கடந்து செல்ல வேண்டும்.
நீர்வீழ்ச்சி கட்டமைப்பு குறித்து யாருடைய அவதானமும் செலுத்தப்படவில்லை. இந்நிலையில், பரையியன் எல்ல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான அப்புஹாமி என்ற நபரினால் இதற்கு செல்ல கூடிய வகையில் சிறிய வீதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காடு ஒன்றிற்கு நடுவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் செல்வது மிகவும் கடியமாகும். வீதியை அறிந்து கொள்ளாமல் அதனை நெருக்க முடியாதென அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இந்த நீர் வீழ்ச்சியை அவர் துன்ஹித என்ற பெயரில் அடையாளப்படுத்துகின்ற போதிலும் அதற்கு இன்னமும் உரிய பெயர் ஒன்று வைக்கப்படவில்லை.
இந்த நீர்வீழ்ச்சியுடன் மேலும் 20 அடி உயரமான விசேட நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. அங்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நீர் வீழ்ச்சிக்கு நடுவில் வானவில் ஒன்று தோன்றுவதே அதன் விசேட அம்சமாகும். இந்த வானவில் பல நிறங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்காக இதுவரையில் எந்தவொரு உள்நாட்டு சுற்றுலா பயணியும் சென்றதில்லை எனவும், வெளிநாட்டவர்கள் சிலர் மாத்திரம் அதனை பார்க்க சென்றுள்ளதாகவும், இதனால், ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.