ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவிலான புகலிடக் கோரிக்கையாளர்களை உள்வவாங்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புகலிடத் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர் ஒருவர் தொடர்பான வழக்கில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலமே இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரசாங்கத்தினால் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் வழக்கை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விசாரணை செய்தது.
இந்த விசாரணையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சகாய பாதுகாப்பு பெற முடியும் என்று அறிவித்திருந்தது.
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகலிட விண்ணப்பம் கோரியுள்ளவர்களுக்கு புகலிட அந்தஸ்த்து பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலத்தின் போதும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் தாம் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியுள்ள 70 க்கும் அதிகமான தமிழ் ஆண்கள் அண்மையில் சர்வதேச ஆய்வு ஒன்றில் சாட்சியளித்திருந்தனர்.
இதனடிப்படையிலேயே ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரியுள்ளவர்கள் உள்வாங்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.