வறட்சியினால் 1இலட்சத்து 56 ஆயிரத்து 381 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 17 ஆயிரத்து 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,2018 ஜனவரி மாதம் முதல் இன்றுவரை புத்தளம் மாவட்டத்தில் 2இலட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.1 இலட்சத்து 20 ஆயிரத்து 803 பேர் குருநாகல் மாவட்டத்திலும் , மன்னார் மாவட்டத்தில் 1இலட்சத்து ஆயிரத்து 983 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து வவுனியா மாவட்டத்தில் 5ஆயிரத்து 3 பேர் , ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 624 பேரும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது