எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் கடற்படை வீரரான லெப்டினென் சமுத்ர நிலுபுல் டி கொஸ்தா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட எவன்கார்ட் ஆயுத கப்பல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கப்பலின் மற்றுமொரு சந்தேகநபரான முன்னாள் கடற்படை வீரர் லெப்டினென் சமுத்ர நிலுபுல் டி கொஸ்தா இன்ற காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் எவன்கார்ட் நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளராக பணியாற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று வியாழக்கிழமை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.