பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலி எல்லி க்கு துரோகம் செய்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகை எல்லி அவ்ரமை காதலித்து வருகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றினார்கள், வைபவங்களுக்கு சென்றார்கள். இந்நிலையில் பாண்டியா வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவின் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராதேலா கலந்து கொண்டார். அவரும், பாண்டியாவும் மிகவும் நெருக்கமாக இருப்பதை பார்த்தவர்கள் இது நட்பு அல்ல அதற்கும் மேல என்று கதைக்கத் துவங்கிவிட்டனர்.
திருமண நிகழ்ச்சிக்கு அத்தனை பேர் வந்தபோதிலும் ஊர்வசியின் கண்கள் பாண்டியா மீது மட்டுமே இருந்ததாம்.
அத் திருமண நிகழ்ச்சியில், பாண்டியாவின் மீதே ஊர்வசியின் பார்வை இருந்ததாகவும், பாண்டியாவும் ஊர்வசிக்குதான் அதிகளவிலான முக்கியத்துவம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பாண்டியா எல்லி அவ்ரமை ஏமாற்றுகிறாரா இல்லை அவர்கள் ஏற்கனவே பிரிந்து விட்டார்களா என்று பற்றித் தெரியவில்லை.
இந்நிலையில் எல்லி அவ்ரம் சல்மான்கானுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், சல்மான்கானின் காதலியான நடிகை லூலியா வந்தூரும், எல்லி அவ்ரமும் தோழிகள். இந்நிலையில்தான் அவர்கள் இருவரும் சேர்ந்து சல்மானுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.