Loading...
சென்னை- பெங்களூர் அணிகள் இடையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பவுண்டரிகளை விட சிக்சர்களே அதிகம் விளாசப்பட்டன.
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மொத்தமாக 33 சிக்சர்கள் விளாசப்பட்டன. ஆனால் 18 பவுண்டரிகளே மொத்தமாக அடிக்கப்பட்டது.
இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஆட்டத்தில் இந்த போட்டி இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
இதோடு ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசப்பட்ட போட்டியாகவும் நேற்றைய போட்டி அமைந்தது.
கடந்த 2016-ல் நியூ பிளைமெளத்தில் நடைபெற்ற செண்ட்ரல் டிஸ்டிரிக்ஸ் – ஓடகோ அணிகள் இடையிலான ஆட்டத்தில் 34 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே டி20 போட்டியில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட போட்டியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...