டோனி பந்துகளை விளாசிய விதம் அருமையாக இருந்தது எனவும், ஆனால் எங்களுக்கு எதிராக அவர் அடித்ததை தான் பார்க்கமுடியவில்லை எனவும் கோஹ்லி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை – பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது.
டோனி 34 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.
தோல்விக்கு பின்னர் பேசிய பெங்களூர் அணித் தலைவர் விராட் கோஹ்லி, இப்போட்டியில் நாங்கள் பந்துவீசிய விதத்தை ஏற்று கொள்ள முடியாது.
கடைசி கட்டத்தில் அதிக ஓட்டங்களை விட்டு கொடுப்பது கிரிமினல்தனமானது.
இருந்தாலும் எங்கள் பந்துவீச்சாளர்களை ஆதரிக்கிறேன், அவர்களுக்கு போதுமான நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
டோனி இப்போட்டியில் பந்தை விளாசிய விதத்தை பார்க்கும் போது அருமையாக இருந்தது, ஆனால் எங்களுக்கு எதிராக அவர் விளையாடியதை தான் ரசிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.