தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் அதிக மெனக்கெட்டு வருகிறார்.
நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் உருவாகி உள்ளது.
இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் 5 பாடல்களுக்கு இசையமைத்து விட்டதாகவும், மீதமுள்ள ஒர் பாடலுக்கு இசையமைத்து வருவதாகவும் அனிருத் கூறியிருக்கிறார். மேலும், ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு மிகவும் என்ஜாய்யுடன் வேலை பார்ப்பதாகவும், அடுத்த மாதம் ஒரு பாடலை வெளியிட இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அனிருத் இவ்வாறு கூறியிருப்பது படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.