Loading...
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக் கிழமையும் வீழ்ச்சிப்போக்கை காட்டியதாக பொருளியல் நிபுணர்கள் தரப்பிலிருந்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்ச்சியாக கடந்த இரண்டு வார காலமாக ஏற்பட்டு வரும் வீழ்ச்சியாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ரூபாவின் பெறுமதி 157ரூபா 75 சதமாக இருந்ததென கூறப்பட்டுள்ளது.
Loading...
இது நேற்று முன்தினத்தைக் காட்டிலும் 15 சத வீழ்ச்சியாக பதிவானது. இதன்படி ரூபாவின் பெறுமதி இந்த வாரத்தில் 0.9 வீத வீழ்ச்சியாகவும் இந்த மாதத்தில் 1.4 வீத வீழ்ச்சியாகவும் பதிவாகியுள்ளது.
Loading...