இலங்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மே தின கூட்டங்கள் பேணிகள் தொடர்பிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரையிலான காலப் பகுதியில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் காலி போன்ற நகரங்களில் பிரதான மே தினக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
கூட்டங்கள் பேரணிகள் அமைதியான முறையில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தக் காலப் பகுதியில் வீதிகள் மூடப்படவும் போக்குவரத்து தடைகளும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமைதியான கூட்டங்கள் பேரணிகள் சில வேளைகளில் மோதல்களாக வெடிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரிய கூட்டங்கள், பேரணிகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்க பிரஜைகளிடம், தூதரகம் கோரியுள்ளது.