போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டன் அயலுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டன் அயலுறவு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதற்கும் பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ளது.
கண்ணிவெடிகள் தொடர்பில் பன்னாட்டு ரீதியில் காணப்படும் பல ஒப்பந்தங்களில் இலங்கை கடந்த காலங்களில் கைச்சாத்திட்டது.
இதனையடுத்து, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பில் பன்னாடுகள் அவதானம் செலுத்தியிருந்தன.
மேலும், கடந்த வருடம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற மாநாட்டில், 2020ஆம் ஆண்டில், இலங்கை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்றமடையும் எனப் பெயரிடப்பட்டிருந்தது.
எனினும், கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக வந்திருந்த பன்னாட்டு அமைப்புகள் பல நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை காரணமாக, கண்ணிவெடி அகற்றும் பணிகள் தாமதமடைந்துள்ளன.
அதனையடுத்து, இலங்கை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்றமடையும் வருடமாக 2025ஆம் ஆண்டு என அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.