சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது.
கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து தோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இதில் தோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். அம்பதி ராயுடுவும் அதிரடியாக ஆடினார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தொடக்கத்தில் தோனி வேகமாக ஓடிய பீல்டிங் ஒன்று வைரல் ஆனது. டி காக் அடித்து பின் பக்கம் சென்ற பந்தை தடுப்பதற்காக அவர் வேகமாக ஓடியுள்ளார்.
இந்த பந்தை தடுப்பதற்காக இவர் மொத்தம் 28 மீட்டர் ஓடி இருக்கிறார். இதை இவர் மொத்தம் 6.12 நொடிகளில் கடந்து இருக்கிறார். இந்த நேரம் பந்தை தடுப்பதையும் சேர்த்து ஆகும்.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் இவர் 22 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடி இருக்கிறார், என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கணித்து இருக்கிறார்கள். காலில் பேட் கட்டிக்கொண்டு இப்படி ஓடுவது மிகவும் கடினம் ஆகும்.
டோனியின் இந்த அதிரடியான ஒட்டத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.<