Loading...
உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் சாம்சுங் நிறுவனம் கடந்த மாதம் தனது புத்தம் புதிய கைப்பேசிகளான Galaxy S9, S9+ ஆகியவற்றினை அறிமுகம் செய்திருந்தது.
இவ்வாறு அறிமுகம் செய்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் சுமார் 8 மில்லியன் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சுமார் 2.8 மில்லியன் கைப்பேசிகள் அமெரிக்கா மற்றும் கொரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டும் உள்ளது.
Loading...
இதேவேளை 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Galaxy S7, Galaxy S7 Edge ஆகிய கைப்பேசிகள் 48 மில்லியன் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy S8, Galaxy S8+ கைப்பேசிகள் 41 மில்லியன் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...