குழாயிலிருந்து தண்ணீரை நேரடியாக அருந்துவதுபற்றி நம்மில் பலர் பெரிதளவு யோசிக்கமாட்டோம்.
ஆனால் நீண்டகாலம் பயன்படுத்தப்படாத குழாயிலுள்ள தண்ணீரில் நுண்ணுயிர்க் கிருமிகள் அதிகரிக்கின்றன.
Legionnaires’ போன்ற சளிக்காய்ச்சலை உண்டாக்கக்கூடிய நுண்ணுயிர்க் கிருமிகள் இவ்வாறு பரவக்கூடும்.
குழாய்களின் உட்புறத்தில் இயல்பாகவே பல நுண்ணுயிரிகள் உள்ளன.
அவற்றில் சில தீங்கு விளைவிக்கக்கூடும்.
இந்நிலையில் குழாய் ஒருசில நாட்கள் பயன்படுத்தப்படாதபோது நுண்ணுயிரிகளும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் சேர்கின்றன.
இதனால் தண்ணீரில் நுண்ணுயிர்க் கிருமிகள் அதிகரிக்கக்கூடும்.
ஆனால் பதற்றம் வேண்டாம்.
குழாயிலிருந்து வெளிவரும் முதல் 100 மில்லிலிட்டர் தண்ணீரில்தான் இத்தகைய கிருமிகள் அதிகம் காணப்படும்.
அதனால் சிறிது நாட்கள் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியதும் குழாய்த் தண்ணீரை உடனே அருந்தாதீர்கள்!
100 மில்லிலிட்டர் தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றிவிட்டு மீதித் தண்ணீரை அருந்துங்கள்!