Loading...
அஜர்பைஜான் நாட்டில் செயல்பட்டுவரும் அமெரிக்க அதிபருக்கு சொந்தமான டிரம்ப் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான 33 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது.
இந்நிலையில் நேற்று அந்த கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...