Loading...
பிரபல தமிழ் நடிகை ரெஜினா தான் நடுரோட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்துள்ளார்
அவர் நடிப்பில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், பார்ட்டி, மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.
ரெஜினா தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து கூறியுள்ளார். சென்னையில் நண்பர்களுடன் ஈகா தியேட்டர் பாலத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீர் என தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டார்.
இதனால் அதிர்ந்து போன நான், அந்த இளைஞனை எனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வாத்தைகளிலும் திட்டி, துரத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading...