சிரியாவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு சிரிய அரசாங்கத்திற்கு உதவ வெண்டுமென ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் துருக்கி மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுடன் நேற்று சனிக்கிழமை இடமபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிரியாவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை இல்லாதொழிக்க ரஷ்யா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றினைய வெண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இது தொடதர்பில் கருத்து தெரிவித்த துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மெவ்லெட் கவுசோக்ளு( Mevlut Cavusoglu) சிரியாவில் நிலவும் மோதலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் சட்டவிரோதமானவையென்பதுடன், அதனால் நிலைத்திருக்கக்கூடிய தீர்வைக் காண முடியாதெனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.