Loading...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி கட்டாயம் வேட்பாளரை நிறுத்தும் என அந்த கட்சியின் புதிய பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்படுவார் எனவும் அவர் கட்டாயம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Loading...
அதேவேளை அண்மையில் நடந்த ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக எவராலது இருக்கின்றனரா என பிரதமர் கேட்டார்.
எனினும் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக எவரும் அப்போது கூறவில்லை எனவும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
Loading...