இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கில் இளைஞர் ஒருவர் கருத்திட்டமையானது பெரும் சரச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம் மாதம் 27, 28 ஆகிய திகதிகளில் சீனாவின் வுஹானில் மாநாட்டில் பங்கேற்கிறேன் என்று தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
அவரின் அந்தப் பதிவிற்கு பதில் கருத்து செய்திருக்கும் இளைஞர், மிலன் பாண்டியா, அப்படியே வரும் போது, எனக்கு ஒரு ஐபோன் கேபிள் வாங்கி வரவும்.
அதற்கான பணத்தை எனது வங்கி கணக்கில் போடப்படும் ரூ.15 லட்சத்தில் இருந்து கழித்து கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலின் போது, பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய நரேந்திர மோடி, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியக் கறுப்புப் பணங்களை மீண்டு வருவதாகவும், வரும் பணத்தில் ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களின் வங்கிக் கணக்கில் போடுவதாகவும் வாக்குறுதி கொடுத்தார்.
எனினும் நான்காண்டுகள் கடந்தும் இன்னமும் அவர் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக மக்கள் மீது சுமைகளும், பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் தான் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் கிண்டலாக கருத்துக்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.