ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே தொடங்கி,தெலுங்கு உலகின் ஸ்ரீ ரெட்டி வரை, நடிகைகள் அமலா பால், சனுஷா என தொடர்ந்து பல நடிகைகள் பாலியல் தொல்லைகள் பற்றி பேசி வருகின்றனர்.அதுமட்டுமின்றி சிலர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது துணிச்சலாக போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் ரெஜினாவும் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. அவர் தற்போது திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார்.தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை பற்றி கூறுகையில்,ஒரு முறை அல்ல பல முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன். இரண்டு, மூன்று முறைக்கு பிறகு எனக்கு துணிச்சல் வந்துவிட்டது. ஒரு முறை என்னிடம் சில்மிஷம் செய்யப் பார்த்த ஆளை பிடித்து அடித்து நொறுக்கினேன் என்கிறார் ரெஜினா.