11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகியுள்ளது. மும்பையில் ஆரம்பமாகிய போட்டி எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.இதில் நட்சத்திர ஆட்டக்காரர் டோனியை விட அவரது மகள் ஸிவா குறித்த செய்திகள் தான் அதிகம் பகிரப்படுகிறது.சமீபத்தில் டோனி தனது மகளுக்கு தலை உலர வைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவியது, அதற்கு முன்னதாக சாருக்ஹ் கானுடன் மைதானத்தில் அவர் கொஞ்சி விளையாடியது என பல விஷயங்கள் வைரலானது.
இந்நிலையில் ஷிவா டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னை அணியின் கேப்டன் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றில், ஒரு வீடியோவில் தோனி மகள் ஷிவா பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறார். மற்ற இரண்டு வீடியோக்களில் ஷிவா சென்னை அணிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.