Loading...
பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் ஆவண காப்பகத்தில் திடீர் என்று தீப்பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 9.20 மணிளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளளது.
அதுமட்டுமின்றி திடீர் தீப்பரவலால் அங்கு வைக்கப்பட்டிருந்த வழக்குககள் குறித்த பெருமளவான ஆவணங்கள் அழிவடைந்துள்ளன.
Loading...
குறித்த சம்பவத்தை வீதியில் பணித்த நபரொருவர் அவதானித்து காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பின்னர் காவல்துறையும், பண்டாரவளை நகர சபையின் தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், இது நாச வேலையா என பண்டாரவளை காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Loading...