நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அமைச்சரவை மாற்றத்தில், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் அரசாங்கத்தில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வாக, அமைச்சரவையை மறுசீரமைக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பொறுப்புக்களில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாளை மீண்டும் அமைச்சரவை மாற்றப்படவுள்ளது.
அமைச்சரவை மாற்றம் என்பதை விட புதிய அமைச்சரவையாகவே இது அமையும் என்றும், தகுதியானவர்களுக்கே அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு, பிறக்கப் போகும் மே தினத்தில் நாட்டில் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில், புதிய அமைச்சரவை தொடர்பான எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.