வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் ஐந்து பெரிய ஆபத்தான அளவில் தேன்கூடுகள் இருப்பதால், மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி பயில்வதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.அவற்றை அழிக்க அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு அறிவித்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் விசனம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையான விபுலானந்தாக் கல்லூரியில் 2000 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு பெரிய தேனிவகையை சேர்ந்த ஒருவகை குளவிகள் பெரிய கூடுகள் அமைத்துள்ளன.
இது தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.
குளவிகள் இருப்பதனால், பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும் பட்சத்தில் ஆபத்து நேர வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வவுனியா நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பெரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்றன. இதுகுறித்து யாரும் அக்கறை கண்பிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.