பாக்கிஸ்தானில் பிறந்த குழந்தைகளை கொலை செய்து குப்பை தொட்டிகளில் வீசுவது அதிகரித்துள்ளது.
பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் புதிதாக பிறக்கும் குழந்தைகளை கொலை செய்து குப்பை தொட்டிகளில் வீசுவது அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் முறை தவறிய உறவின்மூலம் பிறந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களினால் கைவிடப்பட்ட குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை 355 குழந்தைகள் கொல்லப்பட்டு குப்பை தொட்டிகளில் வீசப்பட்டுள்ளதாகவும், இதில் 99 வீதமான குழந்தைகள் பெண் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதி அறக்கட்டளை மற்றும் சிபா தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்விலே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிபபாக கராச்சியிலே 180 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.