ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 19 ரஷ்யா பெண்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டில் உள்ள மோசூர் நகரை மையமாக கொண்டு இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இதனால் பல நாடுகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இவ் அமைப்பில் சேர்வதற்காக தங்களது நாடுகளில் இருந்து ஈராக்கிற்கு வருகை தந்துள்ளனர்.
இதனடிப்படையில் இவ்வாறு வருகை தந்துள்ளவர்கள் மற்றும் உள்நாட்டில் ஐ.எஸ் பயஙகரவாத அமைப்புக்களை ஆதரித்தவர்கள் என சுமார் 20 ஆயிரம் பேரை ஈராக் அரசு கைது செய்து சிறைகளில் வைத்துள்ளது. இதில் துருக்கி மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 1400 பெண்கள் தண்டனையை எதிர்நோக்கி சிறையில் உள்ளனர்.
இதனடிப்படையில் பாக்தாத்தில் உள்ள பெண்கள் சிறையில் மட்டும் ரஷியாவை சேர்ந்த 57 பெண்களும், அவர்களின் சுமார் 100 குழந்தைகளும் அடைபட்டுள்ளனர். இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 19 ரஷியப் பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து பாக்தாத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.