ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவி தமக்கு மீள வழங்கப்பட்டமையை பலர் வரவேற்கின்ற போதிலும் பிரதித்தலைவர் பதவி குறித்து தாம் திருப்தி கொள்ளவில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தொட்டையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு மாத்திரம் பிரதித்தலைவர் பதவி வழங்கப்பட்டமை, பிரதித்தலைவரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் திருப்தியடைகின்றீர்களா? என பலர் தம்மிடம் வினவுகின்றனர்.
பிரதித்தலைவர் பதவி வழங்கப்பட்டமையோ அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமையோ தமக்கு மகிழ்ச்சியில்லை.
நாடு பூராகவும் 60 ஆயிரம் பேர் வரையில் தொழில்கோரும் பட்டதாரிகளாக உள்ளனர்.
அவர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதன் ஊடாக தமக்கு அந்த திருப்தியை கொள்ள முடியும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்