தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு, தமிழில் பல பாடல்களை பாடியிருக்கும் நிலையில், கன்னட படமொன்றிலும் பாடகராக அறிமுகமாகியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சரத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான சக்க போடு போடு ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். அடுத்ததாக ஓவியா நடிக்கும் 90 எம்.எல்., படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
தமிழில் பல பாடல்களை பாடியுள்ள சிம்பு தற்போது கன்னட படமொன்றில் பாடகராக அறிமுகமாகிறார். இருவுதெல்லவா பிட்டு என்ற கன்னட படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
காவிரி பிரச்சினையில் அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு இரு மாநில மக்களும் சமாதானமாக பேசி தீர்க்க வேண்டும் என்றும் சிம்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.