Loading...
விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இரு நாடுகளின் தலைவர்களின் இந்த திருப்புமுனை சந்திப்புக்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
முன்னதாக, வடகொரியா-தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் தென்கொரியாமிகப்பெரிய ஒலிபெருக்கிகளை கட்டிவைத்து, வடகொரிய அதிபரின் அணுஆயுத மோகம் அந்நாட்டு மக்களை கடுமையான பொருளாதார சீர்குலைவில் நிறுத்திவிடும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்த ஒலிபெருக்கிகளின் மூலம் பிரசாரம் செய்து வந்தது.
Loading...
இருநாடுகளுக்கு இடையிலான புதிய உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் வடகொரியா நாட்டு எல்லையில் அமைத்துள்ள எதிர்பிரசார ஸ்பீக்கர்களை அகற்ற தென்கொரியா தீர்மானித்துள்ளது. நாளை முதல் எல்லைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவித்துள்ள தென்கொரியா ராணுவ செய்தி தொடர்பாளர் சோய் ஹியூன்-சூ இருதரப்பு ராணுவ நம்பிக்கையை மீண்டும் கட்டமைப்பு செய்ய இந்த நடவடிக்கை முதல்படியாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...