தமிழர் தாயகப் பகுதியில் பௌத்த நிகழ்ச்சி நிரலை திணிக்க முயன்றால், ஈழத் தமிழனின் குரல் அதற்கெதிராக ஒலிக்குமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதன் விளைவுகளை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அலங்கரிக்கப்பட்ட தோரணைகள், வெளிச்சக்கூடுகள் என்பன இம்முறை வழமையை விட அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு அதிருப்தி வெளியிடும் வகையில் சிவாஜிலிங்கம் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
இச்செயற்பாடானது தமிழர்கள் ஆளப்படும் இனம் என்றும் சிங்களவர்கள் ஆளும் இனம் என்பதையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதென தெரிவித்த சிவாஜிலிங்கம், மதத்தின் பெயரால் மக்களை ஆள முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென மேலும் தெரிவித்தார்.