ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (Refugeestatus) கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்குஉள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவசிகிச்சை பெற முடியாது என்பதையும் நிரூபித்தால், “சகாயகரபாதுகாப்பு” ( Subsidiary Protection ) என்றுஅழைக்கப்படும் புகலிட அனுமதியை பெற்றுக்கொள்ள இயலும் என ஐரோப்பிய நீதிமன்றம் (European court ofJustice) தீர்ப்பளித்துள்ளது.
சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான திரு அருண் கணநாதன் மற்றும் கீத் குலசேகரம் ஆகியயோரினால் முன்னெடுத்து செல்லப்பட்ட ஒரு ஈழத்தமிழர் தொடர்பிலான வழக்கிலேயே ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
அதாவது மனித உரிமைச் சட்ட விதியின் கீழ் ஐரோப்பாவில் தஞ்சம் கோரிவிண்ணப்பிக்கும் ஒருவர் கடந்தகாலத்தில் அனுபவித்த சித்திரவதைகளின் விளைவாக தமதுஉடல் அல்லது உளவியல் சார்ந்த கடுமையான பாதிப்புகளை கொண்டிருந்து அவர்சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில. தமது சொந்த நாட்டில் கொலைஅச்சுறுத்தல் போன்ற தீங்குகள் இல்லாவிடினும் போதிய சிகிச்சையின்றி மிகமோசமாகபாதிக்கப்பட நேரிடும் அல்லது தற்கொலை செய்துகொள்ள நேரும் எனக்கண்டால் சப்சிடரிப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்றுஅழைக்கப்படும் புகலிடம் வழங்க ஐரோப்பிய நீதிமன்றம்அனுமதித்து தீர்ப்பளித்துள்ளது.
எனினும் அவரது சொந்த நாட்டில் அவ்வாறான மருத்துவஉதவி கிடைக்கப்பெறாது என்பதை ஆராய்ந்து உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதும்புகலிடம் வழங்குவதும் சம்மந்தப்பட்ட ஐரோப்பிய உறுப்புநாட்டின் நீதிமன்றங்களைசார்ந்தது என அத்தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி
இந்த வழக்கின் விண்ணப்பதாரி தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினராக இருந்தகாரணத்தினால் இலங்கை பாதுகாப்பு படையினரால் முன்பு சித்திரவதைக்கு உட்பட்டிருந்த ஒரு ஈழத்தழிழராவார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாமல் “எம்.பி”(MP) என்று மட்டுமேகுறிப்பிடப்பட்டுள்ள இவர் 2005 இல் ஒரு மாணவராக பிரித்தானியாவை வந்தடைந்தார்.
எனினும் இலங்கையில் உயிர் ஆபத்துகாரணமாக திரும்பிச்செல்ல முடியாத காரணத்தால் 2009 இல் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.
அவர் தான் இலங்கையில் அனுபவித்த சித்திரவதையின் விளைவாக மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வு நோய்க்கு (Post – Traumatic stress Disorder and Depression ) உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் “எம்.பி” இன் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட போதிலும், சிரேஸ்டசட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான அருண் கணநாதன் அவர்களின் கடும் உழைப்பால் அவரதுவழக்கு ஒரு உதாரண வழக்காக தெரிவுசெய்யப்பட்டு, இலங்கைக்கான அரசியல் தஞ்ச வழிகாட்டி வழக்குகளில் (Country Guidance ) ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல மேல்முறையீடுகளினால் இவ்வழக்கு பிரித்தானிய உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
அவர் போன்று, சித்திரவதைகாரணமாக மனநிலை பாதிப்பு அடைந்தவர்களுக்கு புகலிடம் வழங்குவதற்காக புதிய நடைமுறைஒன்றை பிரித்தானிய அரசு உருவாக்க வேண்டும் என்ற வாதத்தை அவரது சட்டத்தரணிகள் உச்சநீதிமன்றில முன்வைத்தனர்;.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கினைவிசாரித்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம், சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection ) என அறியப்படும் மூன்றாம் உலகநாட்டைச்சேரந்த பிரஜைகள் அல்லது நாடற்றவர்களுக்கான குறைந்தபட்ச நியமங்களை அளிக்கும்; ஐரோப்பாவின் 2004 ஆம்ஆண்டு பணிப்புகளின் அடங்கல்கள் குறித்து விதிக்குமாறு லக்ஸம்பேர்க் (Luxemburg) இனை தளமாக கொண்ட ஐரோப்பியநீதிமன்றத்திடம் கோரியிருந்தது.
அதன் பிரகாரதம், ஐரோப்பிய நீதிமன்றத்தில் அருண் கணநாதன் தலைமையிலான சட்டத்தணிகள் குழு ஒன்று இது தொடர்பானவழக்கை வெற்றிகரமாக வாதிட்டிருந்தனர்.
இதற்கான தீர்ப்பை வெளியிட்ட ஐரோப்பிய நீதிமன்றம், சித்திரவதாக்குஉள்ளானவர்கள் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டாலும், சப்சிடரிப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்ற பாதுகாப்பை பெறமுடியும் என்று தெளிவுபடுத்தியிருந்தனர்.
இந்த குறிப்பிட்டஇலங்கையரின் வழக்கில் அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பினால் அங்கு போதிய சிகிச்யையின்மையினால் அவரது உடல்நலத்திற்கு தீங்கு நிகழுமா என்பது குறித்துதீர்மாணிக்க வேண்டியது பிரித்தானிய நீதியரசரே எனவும் தெரிவித்துள்ளது