சர்வதேச தொழிலாளர்தினத்தைமுன்னிட்டு உலகம் முழுவதும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்களும் இன்றையதினம் தமது உரிமைகளை வலியுறுத்தி பேரணிகளை நடத்தியுள்ளனர்.
இதற்கமைய சுவிஸர்லாந்தின்கூரிச் நகரில் புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட மே தின ஊர்வலம் அனைவரனதும்கவனத்தை ஈர்த்திருந்தது.
சுவிஸர்லாந்தின் சூரிச்மாநிலத்திலுள்ள ஹெல்விட்ஷியா பிளாட்ஸ் என்னும் இடத்தில் இருந்து பிரதான புகையிரதவழியாக பல்லின மக்களுடன் ஈழத்தமிழர்களும் தமது உரிமைகளுக்காக தொழிலாளர் தினபேரணியொன்றை நடத்தினர்.
இந்தப் பேரணி சூரிச்பாராளுமன்றம் வரை சென்றடைந்தது. சுவிசில் இருக்கும் தொழிலாளர் சங்கம் முன்செல்ல பலஅரசியல்கட்சிகளும் அவர்களைத் தொடர்ந்து சென்றன.
இதற்கமைய புலம்பெயர் தமிழர்கள்சார்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின் திருவுருவப்படத்தையும் முன்வைத்து பேரணியில் கலந்துகொண்டனர்.
அதேவேளை தமிழினத்திற்கு எதிராகமுன்னெடுக்கப்பட்ட இன அழிப்பை பறைசாற்றும் நிழல் படங்கள் தாங்கிய பதாதைகளையும்பேரணியில் சென்றோர் ஏந்திச் சென்றனர்.
ஏனைய நாட்டு மக்களும் தங்களதுநாட்டுக்கொடியுடன் கோசங்கள் இட்டு பேரணியாக சென்ற துடன், தொழிலாளருக்குஆதரவாக பல கோசங்கள் முன்னெடுக்கப்படடன.
பல்வேறு நாடுகளைச்சேர்ந்தவரக்ள் கலந்துகொண்டிருந்த இந்தப் பேரணியில் தமிழ்மக்கள் இலங்கையிலே நடந்த இன அழிப்புதுண்டு பிரசுரங்களையும் பேரணியில் கலந்கொண் மக்களுக்கு விநியோகித்ததைகாணமுடிந்தது.