Loading...
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில் மேல் , சப்ரகமுவ , தென் , மத்திய , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்கள் போன்று அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
அதேபோல் , நாட்டின் கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70-80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Loading...