இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் சர்வதேச கிரிக்கட் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லசித் மலிங்கா பவுலிங் செய்ய ஓடிவரும்போதே, இவர் என்ன ஓட்டப் பந்தயத்திலா கலந்து கொள்கிறார் என்று கேட்கும் அளவுக்கு அவருடைய வேகம் இருக்கும். அதைவிட வேகமாக அவருடைய கையில் இருந்து பந்து வரும். உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளையும் மிரள வைத்த லசித் மலிங்காவின் நிலை இப்போது கவலைக்கிடமாக மாறியுள்ளது.
34 வயதான அவர் நீண்டகாலமாக சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இணைக்கப்படவில்லை.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படும் தாம், அந்த தொடர் முடியும் வரையில் உள்ளுர் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்.
ஆனால், அவர் மீளவும் சர்வதேச போட்டிகளில் இணைக்கப்பட வேண்டுமாக இருந்தால், போதுமான அளவு உள்ளுர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கிரிக்கட்டின் தலைவர் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் இலங்கை கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க விளையாடுவது ஐயத்துக்குரிய விடயமே என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.