Loading...
மத்துகம – அகலவத்தை வீதியில் ஹொரகந்தமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியால் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் 10 வயதுடைய மகள் மீது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளார்.
Loading...
மத்துகம, தேவாலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், பிரேத பரிசொதனை இன்று இடம்பெற உள்ளது.
லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Loading...