Loading...
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு பொறுப்பேற்றுள்ளார். இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த, மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ், கடந்தமாதம் 27ஆம் நாளுடன் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு நியமிக்கப்பட்டார்.
Loading...
அவர் நேற்று முன்தினம் கரந்தெனியவில் உள்ள இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தலைமையகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
Loading...