Loading...
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்தை, அந்தக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கையில் அதிருப்தி கொண்டுள்ள ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர், ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணிக்கப் போவதாக, முடிவு செய்துள்ளனர் என்று ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியிருந்தார்.
Loading...
எனினும், அவ்வாறான முடிவை தாம் எடுக்கவில்லை என்றும், தமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.
Loading...