Loading...
வெயாங்கொடை, கட்டுகஸ்கொட பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, சந்தேக நபர் உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றை கொண்டு மனைவியின் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் நேற்று வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கட்டுகஸ்கொடை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
Loading...
மரண தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. கொலை சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவனை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
Loading...