Loading...
வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகைகளை அபகரித்துச் சென்ற நரை ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹற்றன் மெண்டிஸ் மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பெண்ணின் மாலையுடன் கூடிய தாலிக் கொடியை சந்தேகநபர் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
களவாடப்பட்ட நகை மற்றும் அலைபேசி உட்பட பணம் என்பவற்றையும் சந்தேகநபரிடமிருந்து பொலிஸார் மீட்டனர். மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...