இலங்கை திரைப்படத்துறையின் தந்தை எனப் போற்றப்படும் மறைந்த சிரேஷ்ட திரைப்படக் கலைஞர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் தொலைந்த கௌரவ பதக்கம் தொடர்பில் விரைந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்குள் அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அத்துடன் பிரதி காவற்துறைமா அதிபர் தலைமையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனிடையே, சம்பவம் தொடர்பில் காணொளி ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பம்பலப்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய விசேட காவற்துறை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு ‘கம்பெரலிய’ என்ற திரைப்படத்திற்காக 1965ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் வைத்து வழங்கப்பட்ட ‘தங்க மயில்’ என்ற விருதுடன் வழங்கப்பட்ட பதக்கம் நேற்றைய அவரது இறுதி கிரிகையின் போது காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.