Loading...
நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை நாளைய தினம் தொடக்கம் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...
மேல், வடமேல், தென், கடலோர பிரதேசங்களில் காலை நேரங்களில் மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே மேல், மத்திய, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரையிலான மழை பொழிய கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Loading...