தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துவரும் நடிகை அமலாபால். அவர் அருகில் உல்ள பூங்காவிற்கு சென்று தலைகீழாக சிரசாசனம் செய்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம் உள்பட ஏராளமான தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமான அமலாபால், இயக்குநர் விஜயை திருமணம் செய்து, பிறகு சில ஆண்டுகளில் அவரை விவாகரத்தும் செய்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதோடு நிற்காமல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இதனால் உடலை சிலிம்மாக வைத்து கொள்ள யோகாசனமும் கற்று வந்தார்.
இந்நிலையில் அருகில் உள்ள ஒரு பூங்காவில் தலைகீழாக சிரசாசனம் செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் யோகாசனம் செய்வதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. சிரசாசனம் செய்வது பற்றி எனது யோகா குரு சொல்லிக் கொடுத்தார்.
ஆனால் அந்த ஆசனத்தை எனது குரு அல்லது மற்றவர் உதவியுடன்தான் என்னால் செய்ய முடிந்தது. தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் அதனை செய்ய முடிந்தது. இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நான், குழந்தையைபோல அங்கும்மிங்கும் ஓடி பூங்காவை சுற்றி எனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.