Loading...
யாழ்ப்பாணம் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினரால் பாரிய முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்கு பாடசாலை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளபோதும் கடற்படையினரின் நடவடிக்கை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
மேலும் சிறந்த பாடசாலைத் திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு குறித்த பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுப்பதற்காக பாடசாலை நிர்வாகத்தினால் பணி தொடங்க உள்ள நிலையில் கடற்படையினர் திடீரென முகாம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு பாடசாலைக் காணியில் கடற்படையினர் முகாம் அமைப்பதை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதாக பாடசாலை சமூகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...