Loading...
வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் நாளை கடும் வெப்பம் நிலவும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
பொலன்னறுவை , அநுராதபுரம் , வவுனியா , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் கூடிய வெப்பம் நிலவும்.
இந்த நிலைமை காரணமாக பொதுமக்கள் அதிகம் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இயன்றளவு நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் , அதிகம் நீரைப் பருகுமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.
முதியவர்கள் மற்றும் நோயாளர்கள், குழந்தைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading...